உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி காந்தி மார்க்கெட் கட்டடப்பணிகளில் தொய்வு

பழநி காந்தி மார்க்கெட் கட்டடப்பணிகளில் தொய்வு

பழநி; பழநியில் 2023 ல் காந்தி மார்க்கெட் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் தற்போது பணிகள் தொய்வடைந்துள்ளனபழநி நகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த காந்தி தினசரி சந்தை வளாகம் சேதமடைந்தது, புதுப்பித்துக் கட்ட 2023 ஆகஸ்ட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ 11.32 கோடியில் பார்க்கிங், கீழ்த்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று தளங்களில் 150 கடைகள் கட்ட பணி தொடங்கப்பட்டது.இப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. காந்தி மார்க்கெட் கட்டப்பட்டு வரும் பகுதியை சுற்றிலும் உள்ள சாலைகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மொத்த ,சில்லரை வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் காந்தி மார்க்கெட் செயல்படாததால் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் காந்தி மார்க்கெட் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை