தேவை கண்காணிப்பு n நீர்வழிப்பாதைகளில் கொட்டப்படும் கழிவுகள் n உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டையால் அவதி
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சிகளுக்குரிய 300க்கு மேற்பட்ட கண்மாய்கள் ஊருணிகள், ஓடைகள் உள்ளன. கண்மாய் ஆறு ஊருணிகளுக்குரிய வரத்து கால்வாய்கள், ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் அதிக துாரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்காமல் நீர்வரத்து பாதைகளை மறித்து தேக்கத்தை ஏற்படுத்துவதால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது.இதனை கவனிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்களோ கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அடைபட்டு கிடக்கும் பாதைகளை சரி செய்து மழை தண்ணீர் உரிய இடங்களுக்கு செல்வதை உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். கண்மாய்கள் ஊருணிகள் நீர்வழிப்பாதைகளில் கோழி, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் விதித்து துாய்மை காத்திட வேண்டும்.