சேதமான அரசுப் பள்ளி கட்டடம் அகற்றம்
வடமதுரை: வடமதுரை மோர்பட்டியில் சேதமாகி பயனற்று கிடந்த அரசு பள்ளி கட்டடம் தினமலர் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.வடமதுரை மோர்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரு கட்டடங்கள் இருந்த நிலையில் ஒரு கட்டடம் சேதமாக சிலஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. மற்றொரு கட்டடமும் சேதமாக வாடகை கட்டடத்திற்கு பள்ளி மாறியது. புதிய கட்டடம் கட்டப்படாத நிலையில் பயனற்று கிடக்கும் பள்ளி வளாகத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் பணி துவங்கியது.இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதை தொடர்ந்து வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் ஆய்வு செய்து புதிய கட்டடம் அமையும் வரை சுற்றுச்சுவர் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து சேதமான கட்டடமும் அகற்றப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.