உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : அரசியல் தலையீடுகளை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு பணி விதியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாட்களாக போராட்டங்கள் நடக்கிறது. நேற்று மாநில செயலாளர்கள் வீரகடம்பு கோபு,ராஜசேகர் உள்ளிட்டோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள சங்க நிர்வாகிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மாவட்ட தலைவர் சரவணன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருண்பிரசாத்,கவிதா,பொருளாளர் எழில்வளவன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !