வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றிலுமாக புறக்கணிப்பது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்(வி.ஏ.ஓ.,) சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். பொருளாளர் மகேஸ்வரன், தலைமை நிலைய செயலர் லோகநாதன் சைமன், துணைத்தலைவர் அழகுநாட்சி முன்னிலை வகித்தனர். 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.