உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில்,‘தனியார் ஒப்பந்த தொழிலாளர் முறை தொடர்பான அரசு உத்தரவை ஏற்க மாட்டோம் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும்’ என்றார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், இணை செயலாளர் பிரபு, பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, ராஜன், கவுன்சிலர் உமாதேவி, தொழிற்சங்க நிர்வாகிகள், துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ