உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ.130.18 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார். மாநகராட்சி சந்தை ரோட்டில் புதிதாக டிஜிட்டல் நுாலகம், வேடபட்டியில் நவீன மயான கட்டுமான பணி, உயிரி எரிவாயு கூடத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை கலெக்டர் துர்கா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சந்தை ரோடு பகுதியில் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதிக்கு சென்று மாணவிகள் தங்கும் அறை, சமையல் கூடம், உணவருந்தும் இடம், பலசரக்கு இருப்பு அறை, கழிப்பறை, உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பள்ளப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள், பொன்னிமாந்துறை புதுப்பட்டி ரோட்டில் அடர் குறுவனம் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த், மாநகர நகர் நல அலுவலர் முருகானந்த், பொறியாளர் சனல்குமார் உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை