வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
நத்தம் : நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடைபெறும் ஆயத்த ஆடை தயாரிப்பு மையத்தினை பார்வையிட்ட கலெக்டர் வேலம்பட்டி மோதி குளத்தில் துார்வாரும் பணி , சின்னக் காட்டாங்குளத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். ஊராளிபட்டியில் அரசு ஆரம்ப தொடக்க பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணி , புதுப்பட்டியில் துணை சுகாதார நிலையம் பணி, சமுத்திராபட்டி முதல் அங்கையர் கன்னி ஊரணி வரை தார்சாலை பணி, சிறுகுடி மயானத்தில் எரிமேடை பணிகளை ஆய்வு செய்தார்