மேலும் செய்திகள்
சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு
14-Mar-2025
பழனி:நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் இருந்து பக்தர் குழு மார்ச் 17ல் சபரிமலை சென்றது. கேரளாவின் சபரிமலையில் தரிசனம் செய்த பின் சோட்டானிக்கரை, குருவாயூர் சென்றனர். நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். இக்குழுவில் செல்வமணி 47,என்பவரும் வந்திருந்தார்.படிப்பாதை வழியே பழநி கோயில் சென்ற அவர் 10 ரூபாய் தரிசன வரிசையில் காத்திருந்தார். அப்போது, மயங்கி சரிந்தார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ரோப் கார் மூலம் கீழே அழைத்து வரப்பட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர். பழனி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Mar-2025