உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் பாதையாத்திரை பக்தர்கள் என நாள்தோறும் அதிக அளவில் ரயில், பஸ், தனியார் வாகனங்கள் மூலம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் சார்பில் முறையாக செய்து கொடுப்பதில்லை.குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் போதிய கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. திரு ஆவினன்குடி அருகே அருள்ஜோதி வீதி ஆகிய பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் இல்லை. கோயில் சார்பில் உள்ள சுற்றுலா வாகன நிறுத்தும் இடம் ஓரிரண்டே உள்ளது. கோயில் பகுதிகளில் நுழைவுக்கட்டணம் கட்டுவதோடு, தனியார் வாகன பார்க்கிங்கிற்கும் பணம் செலுத்த வேண்டிய நிலையில் பக்தர்கள் உள்ளனர். மேலும், ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.அதே நேரத்தில் கைடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் போலி கைடுகளால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கோயில் வரை பக்தர்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர்.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பழநி கோயில் நகரத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூலை 07, 2025 15:15

நான் போன மாதம் பழனி சென்றிருந்தேன். கோவில் நிர்வாகம் சார்பாக எல்லா வசதிகளும் நன்றாகவே செய்து உள்ளனர். அதிலும் குறிப்பாக இலவச பேட்டரி கார் சர்வீஸ் கோவிலைச் சுற்றி மிகவும் வசதியாக இருக்கிறது. முடி இறக்கும் வசதியும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. விஞ்ச், ரோப் கார் சேவைகளும் நன்றாகவே இருந்தது. அடிவாரம், மலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர்,பாத்ரூம், டாய்லெட் வசதிகளும் செய்து உள்ளனர். சுவாமி தரிசனமும் திருப்தியாக செய்ய முடிந்தது. தரமான பஞ்சாமிர்தம் நியாயமான விலையில் கிடைக்கிறது. வேறு என்ன வேண்டும்?


RAMESH
ஜூலை 07, 2025 22:31

ரோப் கார் இருக்கும் சாலை போக்குவரத்து நெரிசல்.... பார்கிங் வசதி இருக்கிறதா....


R.Karthik
ஜூலை 07, 2025 14:50

அறுபடை வீடுகளை அனைத்தும் சுத்தமில்லாமல் நகரை வைத்துள்ளனர் வசூல்தான் குறிக்கோள் அடிப்படை வசதிகளுக்கு இந்துஅறநிலையத்துறை மற்றும் நகராட்சிகள் லாயக்கற்றவர்கள்.


R.Karthik
ஜூலை 07, 2025 14:48

வசூலிலே மும்முரமாக இருக்கும் இந்துஅறநிலையத்துறை பக்தர்களை எங்கே கண்டுகொள்ள போகிறது இதில் திருப்பதி மாதிரி மாற்றுவார்களாம் டுபாக்கூர்கள்.


Bhaskaran
ஜூலை 07, 2025 13:52

ஒண்ணும் செய்ய முடியாது


jeyavelmurugan
ஜூலை 07, 2025 10:57

கோவில் கோயில் வரும் பக்தர்களை பாதுகாக்க அரசாங்கம் மிகவும் பிரமப்பட்டு பாதுகாக்க வேண்டி இருக்கிறது மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு அதிகம் அங்குள்ள உள்ளவர்கள் அதிகம் கொடுக்கின்றனர் இதை கோயில் நிர்வாகம் ஸ்பீக்கரில் அல்லது சொல்வதை விட சரியாக உள்ளது நிர்வாகம் எந்த பக்தர்களிடம் போய் சொல்வதே கிடையாது கேட்டால் ஒரு பக்கம் தொல்ல பக்தர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அவர்கள் ரேடியோ மூலம் அன்னவுன்ஸ் மட்டும்தான் பண்ணுகிறார்கள் என்று மிச்சபடி அவர்கள் 10 மணி நேரம் அக்கறை இல்லை கோயில் நிர்வாகமும் சரி அங்குள்ள வேலை செய்யும் பணியாளர்கள் சரி இது ரொம்ப மிகவும் கொடுமையான விஷயமாக உள்ளது இதை யார் கேட்பது திருப்பதியில் உள்ள போனா அவ்வளவு சொற்பமாக உள்ளது யாரும் அந்தியர்களோ தொல்லை கொடுப்பது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 09:36

பக்தர்களுக்கு வசதிகள் தேவையேயில்லை .அந்த ஊரில் நடமாடும் வழிப்பறிக் கொள்ளையர்களை அரசு கட்டுப்படுத்தினால் போதும். தினமலர் போன்ற மக்கள் பத்திரிகைகள் கூட இந்த வழிப்பறிக் கொள்ளையர்களைப்பற்றி எழுதாதது மிகவும் துரதிர்ஷ்டமே


புதிய வீடியோ