வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாங்க. வந்து கண்டதையும் வாங்கி துண்ணுட்டு குப்பையை சரவணப் பொய்கையிலும், சண்முகா நதியிலும் வீசுங்க.
பழநி:பழநி கோயிலில் நேற்று ஐப்பசி கார்த்திகையை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க திரண்டனர்.இதையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ஆறு கால பூஜையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் படிப்பாதை , வின்ச் மூலம் காலை முதலே கோயிலில் குவிந்தனர். வின்ச்சில் நீண்ட நேரம் காத்திருந்து கோயில் சென்றனர்.படிப்பாதை வழியாகவும் சென்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசித்தனர். மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகார தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருள ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
வாங்க. வந்து கண்டதையும் வாங்கி துண்ணுட்டு குப்பையை சரவணப் பொய்கையிலும், சண்முகா நதியிலும் வீசுங்க.