மேலும் செய்திகள்
பழநியில் காத்திருந்த பக்தர்கள்
27-Jan-2025
பழநி: பழநிக்கு தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கிரி வீதியில் பால்காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, இளநீர் காவடி ஏந்தி அலகு குத்தி வந்தனர். மேளதாளங்களுடன் கும்மியாட்டம், கோலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம் ஆட்டங்களுடன் சுற்றி வந்தனர். வெளிநாட்டு பக்தர்களும் வீதியில் வலம் வந்தனர். நகரெங்கும் அரோகரா கோஷமும் முருகன் பாடல்களும் இசைத்தபடி பக்தர்கள் குழுமியுள்ளனர். கோயிலில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். மூன்று இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
27-Jan-2025