பழநியில் குவிந்த பக்தர்கள்
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று தரிசனத்திற்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர்.வின்ச் மூலம் செல்ல பல மணி நேரம் ஆனது. கட்டண தரிசன வரிசையில் சரியான வசதிகள் இல்லாததால் வெயிலில் காத்திருந்தனர். சிலர் குடைகளைப் பிடித்து நின்றனர். தடையை மீறி சிலர் அலைபேசிகளை எடுத்து வந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். கை குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்கப்பட்டது.