உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான பாலத்தால் பக்தர்கள் அவதி

சேதமான பாலத்தால் பக்தர்கள் அவதி

பண்ணைக்காடு: பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் செல்லும் பாலம் மழை வெள்ளத்தில் சேதமடைந்ததால் பக்தர்கள் தடுமாறுகின்றனர்.பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையின் போது கோயில் முன் உள்ள பாலம் மழையால் சேதமானது.பாலத்தை சீரமைக்காததால் விபத்து அபாயத்தில் நாள்தோறும் பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்த போதும் பண்ணைக்காடு பேரூராட்சி, பெரும்பள்ளம் வனத்துறையினர் பாலத்தை சீரமைக்காது மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் செல்லும் பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ