| ADDED : பிப் 23, 2024 06:01 AM
பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள்திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்களை ரேக்குகளில் நிறுத்த முடியாமல் நடுவில் நிறுத்துகின்றனர். பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் சிரமம் ஏற்படுகிறது . ராஜா, திண்டுக்கல்..............------சேதமடைந்த ரோடுஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் பல இடங்கள் சேதம் அடைந்து பெரிய பள்ளங்களாக மாறிவிட்டது. இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது . - இதனை சீரமைக்க வேண்டும் .ராஜா, ஒட்டன்சத்திரம்..............-------மின்கம்பத்தில் படரும் செடிகள்வடமதுரை திருக்கண் ரோட்டில் லக்கன்பட்டியில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சிவரை செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதில் ஏறும் தேவாங்கு உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இங்குள்ள கொடிகளை மின்வாரியத்தினர் அகற்ற வேண்டும். - கண்ணன், எரியோடு..................--------கரடு முரடான மலை பாதைநத்தம் கரந்தமலைக்கு நத்தம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க செல்கின்றனர். அந்த மலைப் பாதையில் கரடு முரடான பாறைகள் உள்ளது. அதனை அப்புறப்படுத்தி பக்தர்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ந.கோபி, வேம்பார்பட்டி.................---------சாக்கடையில் அடைப்புதிண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜகாபட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது .இதனால் சுகாதாக்கேடு ஏற்படுகிறது . இதன் அருகே குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளது .உடனே அகற்ற வேண்டும். முருகன், ராஜகாபட்டி.............---------மலைபோல் குப்பைதிண்டுக்கல் கொட்டப்பட்டி ரோட்டில் குப்பை மலைபோல் குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் இருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது .குப்பையை அகற்ற வேண்டும். மயில்சாமி, கொட்டப்பட்டி.............---------மண் குவியலால் இடையூறுதிண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் பாதாள சாக்கடையில் துார்வாரி மண் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு அகற்றாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சிதறியும் கிடக்கிறது .போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் முன் மண்ணை அகற்ற வேண்டும்.முருகன், திண்டுக்கல்................................---------