உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்

பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்

பழநி : ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருத்தணியில் துவங்கிய அறுபடை வீடு ஆன்மிகப் பயண குழுவினர் பழநியில் தரிசனம் செய்து திரும்பினர்.ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவண்ணாமலை, கடலுார் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 200 பக்தர்களுடன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி,திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களுக்கு செல்லும் ஆன்மிக பயணம் அக். 6ல் திருத்தணியில் துவங்கியது.நேற்று முன்தினம் (அக்.7)இரவு பழநி வந்தனர். அன்று இரவு பழநியில் தங்கிய அவர்கள் நேற்று (அக். 8) காலை முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். அவர்களை பழநி கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம்,பழமுதிர்ச்சோலை , திருச்செந்துார் கோயில் செல்லும் இவர்கள் இன்று சுவாமிமலையில் தரிசனம் செய்ய பயணத்தை தொடர்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ