உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருப்புகழ் பாடி வழிபட்ட பக்தர்கள்

திருப்புகழ் பாடி வழிபட்ட பக்தர்கள்

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு மதுரை திருப் புகழ் சபையிலிருந்து 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இவர்கள் பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலில் திருப் புகழ் பாடி வழிபட்டனர். நேற்று காலை கிரிவலம் வந்தனர். பழநி படிப்பாதையில் அமைந்துள்ள வேல் சிலை முன் அமர்ந்து திருப்புகழ் பாடிய பின் படி பூஜை செய்து மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புகழ் சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் செந்தில்சுப்பிரமணியம், செயலாளர் லோகநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ