| ADDED : ஆக 01, 2011 11:13 PM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது. வத்தலக்குண்டு தனலட்சுமி புக் ஸ்டால், தமிழ்நாடு தமிழ்பதிப்பாளர் சங்கம் இணைந்து 23 நாட்கள் புத்தக கண்காட்சி நடத்துகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நடைபெறும் புத்தக கண்காட்சி துவக்கவிழாவிற்கு பி.வி.பி., கல்லூரிகள் தாளாளர் சுப்பிரமணி, வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் ராஜாத்திமெர்சி ஆகியோர் தலைமை வகித்தனர். ஓவியா பதிப்பக பதிப்பாளர் வதிலைபிரபா வரவேற்றார். விற்பனையை மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகநாதபாண்டியன் துவக்கி வைத்தார். சந்தோஷ் ஏஜன்சி நிறுவனர் தங்கவேலு பெற்றுக்கொண்டார்.தியாகி மீனாட்சி சுந்தரம், பட்டிமன்ற நடுவர் முல்லை நடவரசு, காந்திநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெகநாதன், செனார்டு இயக்குனர் தங்கமுத்து, குறிஞ்சி லாட்ஜ் உரிமையாளர் முருகன், ஹயக்ரீவர் கல்லூரி தலைவர் மாரிக்கண்ணன் உட்பட பலர் பேசினர். தனலட்சுமி புத்தக நிலைய உரிமையாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.