உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., வினர் 6 பேர் மீது வழக்கு

அ.தி.மு.க., வினர் 6 பேர் மீது வழக்கு

பண்ணைக்காடு : பண்ணைக்காட்டில் அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்ணைக்காடு ஆலடிபட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். ஒன்றிய அ.தி.மு.க., பேரவை இணை செயலாளராக உள்ளார். பண்ணைக்காடு பேரூர் செயலாளரை மாற்றக்கோறி சிலருடன் சேர்ந்துகொண்டு கட்சி தலைமைக்கு புகார் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ணைக்காட்டை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிககள் சண்முகசுந்தரம், செந்தில்குமார், அழகுராஜன், வெள்ளையன், கண்ணன், பழனிச்சாமி உள்ளிட்டோர் ஜெயக்குமாரை வீட்டு முன் தாக்கி கொலை செய்துவிடுதாக மிரட்டி சென்றுள்ளனர். ஜெயக்குமார் புகாரில், தாண்டிக்குடி எஸ்.ஐ., சில்வியாஜாஸ்மின், அ.தி.மு.க., வினர் ஆறுபேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி