உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விநாயகர் சதுர்த்தி விழா பிரச்னை தவிர்க்க கெடுபிடி

விநாயகர் சதுர்த்தி விழா பிரச்னை தவிர்க்க கெடுபிடி

வடமதுரை : விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் தொடர்பாக கட்சி, அமைப்பு, இயக்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் வடமதுரையில் நடந்தது. கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட விதிமுறைகள்: * விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற்ற இடங்களில் செப்., 1 ல், பிரதிஷ்டை செய்யப்பட்டு, 2 ம் தேதி மாலை 5 மணிக்குள் கரைக்கப்பட வேண்டும். * சிலை வைக்கப்படும் இடத்தின் கூரை தீப்பிடிக்காத வகையில் தகர சீட்டினால் இருப்பதுடன், போதிய மின் விளக்கு வசதி செய்ய வேண்டும்.* சிலை பாதுகாப்பு குழுவினர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். * சிலைகளின் ஊர்வலப்பாதையில் பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது.* ஊர்வலத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது. * ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் பேட்ஜ் அணிய வேண்டும், எந்தவிதமான ஆயுதங்களும் கொண்டு செல்லக்கூடாது.* மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள அறிவுரைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.* சிலை வைக்கும் நாள் முதல், சிலைகள் சென்றடையும் நாள் வரை, அரசின் சட்டத்திற்கு உட்பட்டு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். * சிலைகள் அமைக்கும் இடங்கள், ஊர்வலப் பாதைகளை மாற்றவோ, அனுமதிக்கவோ போலீசாருக்கு அதிகாரம் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்