உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விநாயகர் சிலை பறிமுதல்

விநாயகர் சிலை பறிமுதல்

திண்டுக்கல் : அனுமதியின்றி திண்டுக்கல் பாறைப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பாறைப்பட்டியில் ஊர் மக்கள் சார்பில் வழக்கமாக ஒரு விநாயகர் சிலை வைக்கப்படுவது வழக்கம். இந்த முறை கூடுதலாக அனுமதியின்றி இந்து முன்னணி சார்பில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து டி.எஸ். பி., சுருளிராஜ், அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்துள்ளதாக கூறி சிலையை பறிமுதல் செய்தார். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ரவிபாலன், டி.எஸ்.பி., சுருளிராஜ், தாசில்தார் செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் சிலையை மீண்டும் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து போலீசாரே விநாயகர் சிலையை கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை