உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோர செடிகளை அகற்றுவதில் மெத்தனம்

ரோட்டோர செடிகளை அகற்றுவதில் மெத்தனம்

தாண்டிக்குடி : தடியன்குடிசை-கே.சி.பட்டி இடையே ரோட்டோரமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இடைப்பட்ட 18.கி.மீ., ரோட்டில் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் முற்றிலும் செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலை தொடர்வதால் இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பயணிகள் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையின் மெத்தனம் விபத்துக்கு வழி வகுப்பதால் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கும் தீர்வு இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி செடிகளை அகற்ற நடவடிக்கையில் இறங்க உள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்