உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல்; திண்டுக்கல், குடைபாறைப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர்சிலை, 500 போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோட்டைக்குளத்தில் கரைக்கப்பட்டது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க மதுரை ரோடு வழியாக எடுத்துவரப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்படுவது வழக்கம். 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊர்வலத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, பதற்றத்திற்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அங்கு 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை விசர்ஜனத்துக்காக நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஹிந்து முன்னணியினர், பிற ஹிந்து அமைப்புகள், குடைப்பாறைப்பட்டி பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எஸ்.பி., பிரதீப் நேரடி கண்காணிப்பின் பேரில், ஏ.டி.எஸ்.பி.க்கள், 2 டி.எஸ்.பி., நக்சல் தடுப்புப்பிரிவு சிறப்புப்படை, உளவுத்துறையினர், அதிரடிப்படை உள்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் இருந்தன. காளியம்மன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட ஊர்வலம், வத்தலக்குண்டு ரோடு வழியாக, மதுரை ரோடு ஜங்ஷன்வந்தடைந்தது. அங்கு, மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் அருகே மேளம் அடிப்பது நிறுத்தப்பட்டது. போலீஸ் கயிறு கட்டி பாதுகாப்பு வளையம் உருவாக்கினர். ஊர்வலம் யானை தெப்பம் பகுதிக்கு வந்ததும் மீண்டும் மேளதாளங்கள் முழங்க தொடர்ந்தது. பின்னர், கோட்டைக்குளத்தில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிலை கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
ஆக 30, 2025 20:48

எதுக்கு 500 போலீஸ் பாதுகாப்பு.... யாராவது இடையூறு ஏற்படுத்தினால்..... கலவரம் செய்ய முற்பட்டால்...... அவர்களை சுட்டு தள்ள வேண்டியது தானே ??.... இந்த மாடல் அரசு அப்படி செய்யாது..... இடையூறு செய்யும் ஆட்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை