உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மனுக்கள் மீது படுத்து துாங்கி மாற்றுத்திறனாளி போராட்டம்

 மனுக்கள் மீது படுத்து துாங்கி மாற்றுத்திறனாளி போராட்டம்

திண்டுக்கல்: பலமுறை அளித்த மனுக்கள் கிடப்பில் இருந்ததால் மனுக்களை ரோட்டில் போட்டு அதன் மீது படுத்து மாற்றுத்திறனாளி ஒருவர் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். கொடைக்கானல் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு. கோரிக்கை மனுக்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த இவர் வைத்திருந்த மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரோட்டில் போட்டு மனுக்கள் மீது படுத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது: தாண்டிக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கொடுத்தேன். மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனது மனுக்கள் துாங்குவதால் நானும் மனுக்கள் மீது படுத்து துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை