உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

திண்டுக்கல்: கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கப்பட்டது.திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பூங்கொடி தொடக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் செந்திவேல், தொடர்பு அலுவலர் ரமேஷ், விற்பனையாளர் முருகன் கலந்து கொண்டனர்.கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் செந்திவேல் கூறியதாவது: கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுடி வழங்கி உள்ளது. கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் ஆகிய 3 விற்பனை நிலையங்களில் கடந்தாண்டு தீபாவளி விற்பனை ரூ.84.94 லட்சம் அளவிற்கு நடைபெற்றது. நடப்பாண்டு ரூ.1.17 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை www.cooptex.gov.inஎன்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. அரசு, அரசு சார்பு நிறுவனப் பணியாளர்கள் ,ஆசிரியர்களுக்கு கைத்தறி முன்பண திட்டத்தின் மூலமாக கைத்தறித் துணிகளுக்கு 10 மாத தவணை அடிப்படையில் வட்டியில்லா கடன் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ