மேலும் செய்திகள்
நடைமேடையில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
30-May-2025
சேதமான தண்ணீர் தொட்டிதிண்டுக்கல் பாறைப்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதமாகி தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் .தொட்டியை சுற்றி புதர் மண்டி உள்ளது. போர்வெல்லை சரி செய்து தொட்டியை புதிதாக அமைக்க வேண்டும்.முருகேசன், பாறைப்பட்டி..................---------சிதைந்த மின் கம்பம்வடமதுரை சிக்குபோலகவுண்டன்பட்டியில் இருந்து கொசவபட்டி செல்லும் ரோட்டில் சிதைந்து போன மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய கம்பம் நட்டு பல வாரங்களாகியும் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. செந்தில், வடமதுரை...........---------சேதமான பெயர் பலகைதிண்டுக்கல் நாகல் நகர் அண்ணாமலையார் பள்ளி ரோட்டில் உள்ள பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பாதை தெரியாமல் சிலர் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதம்பி, நாகல்நகர்.........----------நீதிமன்ற வளாகத்தில் புதர்திண்டுக்கல் நீதிமன்ற வளாக கட்டடத்திற்குள் செடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது .இதனால் இப்பகுதியை சுத்தப்படுத்தி செடகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.ஜெயராமன், திண்டுக்கல்...............----------குப்பையால் பாதிப்புபழநி பழனியாண்டவர் நகர் ரோட்டில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குளித்துள்ளது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பும் ஏற்படுகிறது .குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா, பழநி..................-----------சிரமத்தில் மாணவர்கள்திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. கரடுமுறடான இப்பாதையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரன், திண்டுக்கல்.....-----------ரோட்டில் கோழிக்கழிவுதிண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரகேடும் ஏற்படுகிறது .பல நாட்களாக அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் நோய் தொற்றும் உருவாகிறது . இதற்கு வழி காண வேண்டும். முரளி, திண்டுக்கல்...........----------
30-May-2025