ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று
கால்நடைகளால் விபரீதம்திண்டுக்கல் ஜி.டி.என். ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது . வாகனங்களில் செல்வோரும் விபத்தில் சிக்க சிரமப்படுகின்றனர்.இதை தவிர்க்க ரோடுகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் .பழனிச்சாமி, திண்டுக்கல்..................--------ரோட்டில் ஓடும் கழிவு நீர்பழைய வத்தலக்குண்டில் கழுவு நீர் ரோட்டில் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது .இதோடு கழிவு நீர் தேங்கி நிற்பதால் ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது .அழகுமணி, பழைய வத்தலக்குண்டு...............--------சீரமைக்காத ரோடுநிலக்கோட்டை அருகே அனைப்பட்டியில் இருந்து விளாம்பட்டி வழி செல்லும் ரோடு சில மாதங்களுக்கும் முன் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்காமல் உள்ளது. சி.அய்யர்பாண்டி, நிலக்கோட்டை..............---------சேதமான அங்கன்வாடிவடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்துள்ளது .இதனால் இங்கு கல்வி பயிலும் குழந்தைகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது .இதை கருதி புதிய கட்டடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். --மணிவேல், வடமதுரை...........---------ரோட்டில் கோழிக் கழிவுகள்திண்டுக்கல் அருகே மாலபட்டி ரோட்டில் கோழிக் கழிவுகளை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுகிறது. குப்பையுடன் கோழிக்கழிவு கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. கழிவுகளை கொட்டுவார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயா, திண்டுக்கல்...........----------சேதமடைந்த தொட்டிதிண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. கட்டட கம்பிகள் வெளியே தெரிவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் .தொட்டியை சீரமைக்க வேண்டும் .இல்லையெனில் அகற்ற வேண்டும். சிவா, பாறைப்பட்டி................----------புதர் மண்டி உள்ள சாக்கடைதிண்டுக்கல் செல்வி நகர் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளதால் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது .இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர் . முறையாக அகற்ற வேண்டும். வாணி, திண்டுக்கல்..............-----------