உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளி: பழநியில் குவிந்த பக்தர்கள்

தீபாவளி: பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தீபாவளியையொட்டி நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.இக்கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று வந்த பக்தர்கள் வின்ச் மூலம் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். வெளி மாநில, வெளியூர், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். அன்னதானத்திலும் காத்திருந்து உணவு அருந்தினர். கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தனி வழி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.கிரி வீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால் பேட்டரி கார், பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை