மேலும் செய்திகள்
தொழில் போட்டியால் மாமனை வெட்டிய மைத்துனர் கைது
18-Jul-2025
தலைமறைவானதால் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவுதிண்டுக்கல்: போக்சோ வழக்கில் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் வாரான்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த கணக்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், டிரைவராக உள்ளார். 2023ல், இரு வேறு சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக பழநி போலீசாரால் கைது செய்யப் பட்டார். இந்தவழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜராகி வாதாடினார். இதற்கிடையில் ஜாமீனில் வெளிவந்த ஈஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவனார். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு, 3 ஆண்டுகள் சிறை, 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பளித்தார். தலைமறைவான ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைக்க பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
18-Jul-2025