உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதைப்பொருள் தடுப்பு முகாம்

போதைப்பொருள் தடுப்பு முகாம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் உள்ள அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு, பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் வினைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாநில நாட்டு நலப்பணித்திட்ட உதவி தொடர்பு அலுவலர் எம்.சவுந்தரராஜ் தலைமை வகித்தார். இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி பேசினார். திட்ட அலுவலர்கள் செல்வராஜ், சரவணக்குமார், கணேஷ் பாபு, நடராஜ், செந்தில்குமார், யோகலட்சுமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை