மேலும் செய்திகள்
குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்
18-Jun-2025
சேதமான குவி லென்ஸ்திண்டுக்கல் சிறுமலை ரோட்டில் குவி லென்ஸ் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் நடக்கிறது. குவி லென்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்னபூரணி, திண்டுக்கல்................--------தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்எர்ரமநாயக்கன்பட்டி பெருமாள் மாதோப்பில் மின்ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. கையில் எட்டிப் பிடிக்கும் துாரத்திற்கு தாழ்வாக தொங்குவதால் மின் விபத்துக்கு வாய்ப்பு உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். பெருமாள், கோபால்பட்டி.......---------நாய்களால் அச்சம்திண்டுக்கல் சின்ன அய்யன்குளம் பகுதியில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அச்சுறுத்தலாக உள்ளதால் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் . இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன், திண்டுக்கல்................---------குப்பையை கொட்டி தீதிண்டுக்கல் லாரி பேட்டையில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.சுரேஷ்குமார், திண்டுக்கல்.............----------ஆபத்தை நோக்கி மரம்மணியகாரன்பட்டி கோடாங்கி சின்னான்பட்டி ரோட்டோரம் மரம் காய்ந்த நிலையில் விபத்தை நோக்கி காத்திருக்கிறது . அவ்வழியே செல்வோர் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். ஆபத்தை நோக்கி உள்ள மரத்தை அகற்ற வேண்டும்.- சுந்தரம், அய்யலுார்..............----------சேதமான கழிப்பறைஒட்டன்சத்திரம் சிந்தலப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ஆண்கள் பொது கழிப்பறை பல மாதங்களாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது .இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ரங்கசாமி, சிந்தலப்பட்டி .................----------சாக்கடையில் ஆக்கிரமிப்புபழநி அருகே நெய்க்காரபட்டி அம்பேத்கார் தெரு பகுதியில் சாக்கடை மேல் கட்டடம் கட்டி உள்ளதால் சாக்கடையை துார்வார சிரமம் ஏற்படுகிறது . இதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.முகமது ஜின்னா, மானுார் .................
18-Jun-2025