உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி முதியவர் பலி : 8 வாகனங்கள் சேதம்

கார் மோதி முதியவர் பலி : 8 வாகனங்கள் சேதம்

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் முதியவர் பலியானார்.8 வாகனங்கள் சேதமாகின. பழைய செம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் 27. அங்கு மதுரை ரோட்டில் காரை ஓட்டி வந்தார். பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் நின்ற 2 கார்கள், 6 டூவீலர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ராமநாதபுரம் விவசாயி பாண்டியன் 71, மீது மோதியதில் 30 அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். சென்டர் மீடியனில் மோதி கார் நின்றது. காரில் இருந்த ரஞ்சித் உள்ளிட்ட மூவர் தப்பி ஓடினர். அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்தை மடக்கி பிடித்தனர். பாண்டியன் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ