உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் யானைகள் தின விழா

கொடையில் யானைகள் தின விழா

கொடைக்கானல்: - கொடைக்கானல் பெருமாள் மலையில் உலக யானைகள் தினம், தீத்தடுப்பு விழிப்புணார்வு விழா நடந்தது. இதையொட்டி வட்டார அளவில் வனத்துறை சார்பில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.36 அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா பரிசு வழங்கினார்.உதவி வன பாதுகாவலர் கருப்பையா முன்னிலை வகித்தார். ரேஞ்சர் பழனிக்குமார், வனவர் ஜெய்சங்கர் , வனத்துறையினர் கலந்து கொண்டனர். யானைகள் தினம், தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. தாண்டிக்குடி: வத்தலக்குண்டு வனச்சரகம் சார்பில் உலக யானைகள் தினம் நடந்தது.ரேஞ்சர் காசிலிங்கம் தலைமை வகித்தார். வனவர் ரமேஷ், வனத்துறையினர் கலந்து கொண்டனர். பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, தேவரபன்ப்பட்டி, சங்கா ரெட்டி கோட்டை உள்ளிட்ட அரசு ,தனியார் பள்ளி மாணவர்களிடையே யானைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு காப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை