உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

எரியோடு: நாகையகோட்டை வைவேஸ்புரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமித்து டீக்கடை, ஓட்டல் கட்டப்பட்டிருந்தன. இதே ஊர் விவசாயி கோபாலகிருஷ்ணன் தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 12 வாரங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் எரியோடு போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ