உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு

அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு

வடமதுரை : வடமதுரை ஆண்டிமாநகர் பகுதியில் இருந்து வெள்ளபொம்மன்பட்டி செல்லும் ரோட்டில் வேகத்தடை, அதையொட்டி கேபிள் பதிக்க தோண்டிய பள்ளமும் மிகவும் அருகாருகே அடுத்தடுத்து இருந்தன. இதனால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இது தொடர்பாக தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது இப்பகுதி பள்ளத்தை மூடி உள்ளனர். இதனால் இப்பகுதியினரின் அவதிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ