சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி கலை அறிவியல் கல்லுாரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி 'நமது நிலம் நமது எதிர்காலம்' குறித்த போட்டிகள் நடந்தது. பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழித்தல், துணி பைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காகித பை தயாரித்தல், சணல்பை, மஞ்சள்பை பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. தாளாளர் வேம்பணன், முதல்வர் தேன்மொழி தொடங்கி வைத்தனர். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாமி, சிவரஞ்சனி , மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்தனர்.