உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எத்தனால், மெத்தனால் விற்பனை

எத்தனால், மெத்தனால் விற்பனை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சர்ஜிக்கல் கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.வேதிப்பொருளான எத்தனால், மெத்தனாலை உரிமம் இல்லாமல் விற்பது சட்டப்படி குற்றமாகும். சந்தையில் எத்தனால், மெத்தனால் கள்ள விற்பனை அதிகரித்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதுதொடர்பாக வேதிப்பொருள் விற்பனை செய்யும் கடைகள், சர்ஜிக்கல் பொருள் விற்பனை கம்பெனிகளில் அதிரடி சோதனை நடத்த போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் எஸ்.ஐ.,மலைச்சாமி, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.போலீசார் கூறுகையில், 'எத்தனால், மெத்தனால் உரிமம் இன்றி கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ