உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மோர்பட்டி வழியே பஸ் சேவைக்கு எதிர்பார்ப்பு

மோர்பட்டி வழியே பஸ் சேவைக்கு எதிர்பார்ப்பு

வடமதுரை: மோர்பட்டி வழியே புதிய வழித்தடத்தில் அரசு டவுன் சேவை துவக்கிட பல கிராம மக்கள் கோரியுள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சித்துவார்பட்டி ஊராட்சி வடுகப்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் போதுமானதாக இல்லை. அடிக்கடி வராமல் போவதும் உண்டு. இதனால் தோப்புபட்டி, வடுகப்பட்டி, சித்துவார்பட்டி, பாலக்குறிச்சி, மலைக்கோட்டை, பாரதிநகர் பகுதி மக்கள் அவதிப்படுவர். தற்போது மோர்பட்டி வழியே தார் ரோடு, வரட்டாற்றில் பெரிய கண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் தற்போது பேருந்து சேவை இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் பலர் ஆபத்தான முறையில் நான்கு வழிச்சாலை வழியே வடமதுரை பள்ளிகளுக்கு நடந்து சென்று திரும்புகின்றனர். எனவே திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை, மோர்பட்டி, சித்துவார்பட்டி, பாலக்குறிச்சி வழியே வடுகபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை துவக்கினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர் எனக்கூறி மக்கள் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி யுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி