கொடை அரசு கல்லுாரி முதல்வர் விளக்கம்
கொடைக்கானல் : கொடைக்கானல் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லுாரி முதல்வர் எனோலா அருட் செல்வி பர்வதா அறிக்கை : கொடைக்கானல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பாலியல் குறித்த புகார் முற்றிலும் உண்மையற்றது. இக்கல்லுாரியில் பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் நடக்கவில்லை. முதல்வர் ,விரிவுரையாளர்கள் , மாணவிகள் ஒன்றிணைந்து அறிக்கையை வெளியிடுகிறோம். கல்லுாரி வளர்ச்சிக்காக முதல்வர், விரிவுரையாளர்கள், மாணவிகள், அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.கல்லுாரி வளாகத்தில் செயல்பட்ட விடுதியை கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அறிவுத்தல்படி மூடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.