கண் பரிசோதனை முகாம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கமும், திண்டுக்கல் ராக்போர்ட் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து குஜிலியம்பாறை ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. 218பேர் பங்கேற்றனர். 43 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமினை பாதிரியார் மார்ட்டீன் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்கத் தலைவர் சைலேந்திரராய், சதீஸ் பாலாஜி ராமச்சந்திரன், பிரபாகரன், கோவிந்தசாமி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முருகன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க மாவட்டத்தலைவர் ஆசிரியர் சாமி செய்தார்.