உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுத்தை, யானை நடமாட்டம்; அச்சத்தில் விவசாயிகள்

சிறுத்தை, யானை நடமாட்டம்; அச்சத்தில் விவசாயிகள்

கன்னிவாடி; திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி -பன்றிமலை இடையே பகலில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து, ஒற்றை யானை உலா வர துவங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், மலைக்கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.கன்னிவாடி வனப்பகுதியில் சில ஆண்டுகளாக அவ்வப்போது சிறுத்தை, யானைகள் நடமாட்டம் தொடர்கிறது. பன்றிமலை, பண்ணைப்பட்டி, நீலமலைக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்தபோதும், எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. நவ.7ல், தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலுாருக்கு டூவீலர்களில் சென்ற சிலர், அமைதிச்சோலை அருகே நடுரோட்டில் இரு குட்டிகளுடன் தாய் சிறுத்தை படுத்திருந்தை பார்த்தனர். காலை 7:30 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக அதே பகுதியில் இவை நடமாடிய சூழலில், அப்பகுதியை கடந்து செல்வதை இரு புறமும் வாகன ஓட்டிகள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும், யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கியது. நேற்று தருமத்துப்பட்டி கோம்பையை அடுத்த பெருமாள் கரடு அருகே ஒற்றை யானை முகாமிட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான யானை நடமாட்ட வீடியோ, வலைத்தளங்களில் வைரலானது. ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம்,கன்னிவாடி நாயோடை, ஆத்துார் நீர்த்தேக்க அடிவாரம், தருமத்துப்பட்டி கோம்பை அடிவாரத்தில் யானை நடமாட்டம் தற்போது அதிகரித்தது. கோம்பை வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மலைக்கிராம, உள்ளூர் விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். டூவீலர்களில் வரும் வெளியூர் நபர்களுக்கு, வனத்துறையினர் அனுமதி மறுகின்றனர். விளைபொருள் சாகுபடியை சேதப்படுத்துவது மட்டுமின்றி சிறுத்தை, யானைகளின் தாராள நடமாட்டத்தால் மலைக்கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை