உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிக்கடி கேட்கும் வெடிச்சத்தத்திற்கு விளக்கம் கொடுங்க குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

அடிக்கடி கேட்கும் வெடிச்சத்தத்திற்கு விளக்கம் கொடுங்க குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கேட்கும் வெடிச்சத்தம் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ராஜா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜா, வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) மாயகிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் காயத்ரி முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் விவாதங்கள்...

ராமசாமி,குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர்,வேடசந்துார்:மனுக்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கிறோம். அதற்கு பதில் வருவதே இல்லை. மாவட்டத்தில் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்கிறது. நில அதிர்வு ஏற்படுவது போல் உள்ளது. இதுவரை எவருமே பதிலளிக்கவில்லை.கோட்டைகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர்:இது குறித்து அண்ணா பல்கலையிலிருந்து ஒரு குழு ஆய்வு மேற்கொண்டனர். நில அதிர்வு மையத்தில் நமது மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பதிவாகவில்லை. 40 கிலோ மீட்டர் அளவில் லேசான அதிர்வு இருந்தது. இது விமானங்கள் செல்வதால் வரலாம் என்றனர். மலைகள் அதிகம் சூழ்ந்த பகுதி என்பதால் இந்த சத்தம் இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக சூலுார் விமானப்படைத்தளத்திற்கும் ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.நல்லுச்சாமி,விவசாயி,ஒட்டன்சத்திரம் :விவசாயக் குறைதீர் கூட்டம் நடக்கிற தகவல் தபால் வருவதே இல்லை. குறுஞ்செய்தியதாக கூட அனுப்பவில்லை. ஒட்டன்சத்திரம் அத்திக்கொம்பை மலை அடிவாரத்தில் 2000 லோடுகள் வரை மணல் அள்ளியுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கப்பட்டி செல்லும் வழியில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது.கலெக்டரின் நேர்முக உதவியாளர்:தபால் இனிமேல் தவறாமல் வந்துவிடும். அத்திக்கொம்பை விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்.மகேஸ்வரன்,நிலக்கோட்டை:அரசு நிலங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. விவசாய நிலங்கள் குறுகி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர் நேர்முக உதவியாளர் :ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை முதலில் அகற்ற அறிவுறுத்தப்படும்.பெருமாள், காப்பிளியப்பட்டி:சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக மா விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இழப்பீடு, நிவாரணம் போன்றவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சிறு, குறு விவசாயிகள் கடன் பெற்று போர்வேல் போட்டுள்ளனர். ஆனால் இலவச மின்சாரத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர்:காட்டுப்பன்றி கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறையிடம் விளக்கம், வழிகாட்டுதல்கள் கேட்டு உரிய பதில் அளிக்கப்படும்.ஜான் பெலிக்ஸ், கொசவபட்டி :எங்கள் பகுதியில் விவசாயம் செய்யும் இடத்திற்கு பக்கத்தில் பல ஏக்கர் தனியார் நிலங்கள் உழுகப்படாமல் உள்ளன. அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது.கலெக்டர்:போலீசாரிடம் புகார் அளியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை