உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிர்வால் அச்சம்; தொற்றுக்கு வழிவகுக்கும் கழிப்பறை பாலக்காடு சென்னை ரயிலில் தரமில்லாத பெட்டிகளால் அவதி

அதிர்வால் அச்சம்; தொற்றுக்கு வழிவகுக்கும் கழிப்பறை பாலக்காடு சென்னை ரயிலில் தரமில்லாத பெட்டிகளால் அவதி

பழநி: பழநி ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் ரயில்களில் முக்கிய ரயிலான பாலக்காடு சென்னை ரயிலில் உள்ள பெட்டிகள் தரம் இல்லாமல் இருப்பதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு திருவனந்தபுரம் -மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு -சென்னை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ், கோவை- மதுரை , பாலக்காடு -திருச்செந்துார் ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. வார நாட்களில் மேட்டுப்பாளையம்- தென்காசி வரை செல்லும் ரயில் இயங்கி வருகிறது. இதில் குறிப்பாக பாலக்காடு- சென்னை செல்லும் ரயில் இரவு நேர பயணமாக உள்ளது. இதில் உள்ள ஸ்லீப்பர், 2 ஏசி,3 ஏசி பொதுப் பெட்டிகள் பழைய பெட்டிகளாக இருப்பதால் அதிக அதிர்வு உடன் செல்கிறது. இதனால் இரவு பயணத்தில் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

அச்சத்துடன் பயணம்

நாகேஸ்வரன், ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் பழநி: சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு- சென்னை ரயிலில் பழநியில் இருந்து சென்னை வரை 2 ஏசி பெட்டியில் ரூ.1310 க்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்தேன். அந்த பெட்டியில் நடுவில் உள்ள படுக்கையை மேல் உள்ள படுக்கையினுடைய இணைக்கும் சங்கிலி சேதமடைந்து இருந்தது. இதனால் கீழ் படுக்கையில் படுத்திருந்த நபர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிர்வுகள் இருந்ததால் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.இதில் உள்ள பொதுப் பெட்டிகள் தவிர முன்பதிவு பெட்டிகள் இதே நிலையில்தான் இருந்தது. இது பயணிகளுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.

நோய் தொற்று அபாயம்

சீனிவாசன், ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க செயலாளர்: சென்னை- பாலக்காடு ரயிலில் பயணம் செய்தேன். இதில் கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை. இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. பழைய பெட்டிகள் என்பதால் அதிக சத்தத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இரவு பயணம் மிகவும் தொந்தரவாக அமைந்தது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை