உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்

சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்

ஆத்துார்: நரசிங்கபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் நாய்கள்,ஆடுகள் மாயமாகி வருவதால் சுற்றுப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளதால் மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவை வாழை, சோளம் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துவது தொடர்கிறது. இது போல் ஆத்துார் நீர்தேக்கம் யொட்டிய மலையடிவார பகுதியில் உள்ளகுடியிருப்புகள், தனியார் காட்டேஜ்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானைகள் நடமாட்டமும் பதிவாகி உள்ளது. சித்தையன்கோட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சிறுத்தை, செந்நாய் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், நாய்களும் மாயமாகி வருகின்றன. நரசிங்கபுரம் விவசாயி தங்கப்பாண்டி கூறுகையில், ''கொம்பன்கரடு, கோம்பைக்கரடு பகுதியில் சிறுத்தை தஞ்சமடைந்துள்ளது. ஆத்துார் இரட்டை புளியமரம், கரடு, புதுப்பட்டி மில், தெப்பக்குளம், நரசிங்கபுரம் வழித்தடத்தில் அடுத்தடுத்து சிறுத்தை வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அப்போது பிடிபடும் நாய்கள், ஆடுகளை துாக்கி சென்று விடுகிறது. நேற்று முன்தினம் அறிவுடயான் கோயில் அருகே 2 நாய்களை தாக்கியுள்ளது'' என்றார். கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மாலை, இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி