உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதற்கோர் வழி காணுங்க: ஓட்டல் கழிவுகளை உண்ண வரும் பன்றிகளால் தொற்று

இதற்கோர் வழி காணுங்க: ஓட்டல் கழிவுகளை உண்ண வரும் பன்றிகளால் தொற்று

மாவட்டம் முழுவதும் செயல்படும் ஒருசில ஓட்டல்களிலிருந்து வெளி வரும் உணவு கழிவுகளை குடியிருப்பு பகுதிகள்,பைபாஸ் ரோட்டோரங்களில் சத்தமில்லாமல் ஓட்டல் ஊழியர்கள் கொட்டி செல்கின்றனர். இதை உணவாக உண்ணுவதற்காக பன்றிகள் அதிகம் வருகின்றன. இரவு,அதிகாலை நேரத்தில் நகருக்குள் வரும் போது வழிமாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் ரோட்டோரங்களில் அங்கு இங்குமாய் ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க சென்றால் மக்களை கடிக்க துரத்துகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. தொடரும் இப்பிரச்னைகளால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பன்றிகள் அதிகளவில் நடமாட்டம் இருப்பதால் மக்கள் இரவில் நடமாடவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஒட்டல் கழிவுகளை சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் வகையில் ரோட்டோரங்களில் கொட்டி செல்வோரை கண்டறிந்து உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ