உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீ விபத்து: மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

தீ விபத்து: மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திண்டுக்கல்:திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியாயினர்.இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது; விபத்து நடந்த மருத்துவமனையை ஆய்வு செய்தேன். தகவல் தெரிந்த சிறிது நேரத்தில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.32 நபர்களை மீட்டுள்ளோம். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அமைச்சர் பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !