உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எலக்ட்ரிக்கல் கடையில் தீ; பொருட்கள் சேதம்

எலக்ட்ரிக்கல் கடையில் தீ; பொருட்கள் சேதம்

குஜிலியம்பாறை: பாளையம் எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாயின.பாளையம் அரவை ரோடு பிரிவில் முத்தம்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் 35, சொந்தமான முருகன் எலக்ட்ரிக்கல்ஸ் கடை உள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இரவு 8:00 மணிக்கு புகை மூட்டம் வந்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ வேகமாக எரிந்ததில் அனைத்து பொருட்களும் சேதமாயின. குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் இரவு 9:00 மணி வரை போராடி தீயை அணைத்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை