மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில் ...
04-Oct-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி, ஆராய்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா முன்னிலை வகித்தனர். மதுரை மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் செல்வக்குமார், வேல்முருகன் பேசினர். தமிழ்துறை உதவி பேராசிரியர் மலர்விழி, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்கள் ஜெனிநிர்மலா, அமுதபிரியா ஒருங்கிணைப்பு செய்தனர்.
04-Oct-2025