மேலும் செய்திகள்
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் அக்.17ல் திறப்பு
15-Oct-2024
பழநி : தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு ,வரதமாநதி அணை, குதிரையாறு அணை அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. இதில் வரதமாநதி அணை சில மாதங்களாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பாலாறு -பொருந்தலாறு அணியின் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணிக்கு 52.13அடியாக ( 65அடி) உயர்ந்துள்ளது. வரத்து 14.33 கன அடி,வெளியேற்றம் 9 கன அடியாக உள்ளது. வரதமாநதி அணையில் நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 147 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணை 74.55 அடியாக (80 அடி) உள்ளது. வினாடிக்கு 167 கன அடி நீர் வரத்தும், 7 கன அடி வெளியேற்றமும் உள்ளது.குதிரை ஆறு அணை நேற்று மாலை 4:30 மணிக்கு 75 (80)அடியாக உயர்ந்த நிலையில் இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் குதிரை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்களுக்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
15-Oct-2024