உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இறுதிச்சடங்கில் ரோடுகளில் வீசும் மலர்களை தடுக்கலாமே; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு

இறுதிச்சடங்கில் ரோடுகளில் வீசும் மலர்களை தடுக்கலாமே; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு

மாவட்டம் முழுவதும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உறவினர்கள்,சுற்றத்தார் ஏராளமானோர் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர். ஏராளமான மலர்கள் அலங்கரிக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரோடுகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இவ் வாகனத்தின் பின்னணியில் வருபவர்கள் மலர்களை ரோட்டில் வீசி எறிவது, மின் கம்பிகள், மின் ஒயர்களில் துாக்கி வீசுவதும் என விரும்பத் தகாத நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றனர். மலர்கள் ரோட்டில் வீசப்படுவதால் இவை மழை பெய்யும் தருணத்தில் அழுகி ரோட்டில் வலவலுப்பாகி விபத்துக்களை ஏற்படுத்துகிறது. இது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்த போதும், ஏனோ இதை கண்டு கொள்வதில்லை. மாறாக துக்க நிகழ்விற்கு செல்வோர் மற்றவர்களை துயரத்திற்கு ஆளாக்கும் நிலை உள்ளது. இது போன்று ரோட்டில் வீசப்படும் மலர்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Natesan B
நவ 04, 2024 21:05

என் பெற்றோர் இறந்தவுடன், இறுதிச் சடங்கிற்குச் செல்லும் வழியில் சாலையில் மலர்களைப் பரப்புவதை நிறுத்தினேன். Street people where happy


Vasu
நவ 04, 2024 20:33

மத வேறுபாடு இன்றி சடலங்களை மண்ணில் புதைப்பதை விட எரித்து சாம்பல் ஆக்கினால் நல்லது. இடப் பற்றாக்குறையும்,நோய் பரவாமலும் இருக்க உகந்தது.


Krishnamurthy Venkatesan
நவ 04, 2024 12:24

இறந்தவர் சடலத்தின் மீது போடப்படும் பூ மாலைகளை ரோட்டில் போடுவதால் கொஞ்ச நேரம் கழித்து அவை கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகின்றன மற்றும் தொற்று கிருமிகள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகமே இறந்தவர் வீட்டிற்கு சென்று இறுதி ஊர்வலம் புறப்படும் முன் அந்த பூ மாலைகளை பெற்று சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தலாம். சிறு கட்டணம் வசூலித்தாலும் தப்பில்லை. இந்த கருத்தை சிலமுறை நான் பதிவிட்டுள்ளேன். துக்க வீட்டில் இருப்போரும், நண்பர்களும் அடுத்தவர்களுக்கு இன்னல் கஷ்டம் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும்.


PR Makudeswaran
நவ 04, 2024 10:26

சரிதான். சென்னையில் இன்னும் மோசம். இறுதி யாத்திரையின் போது வீசப்படும் மலர்கள் சாலையில் கிடந்து வாகனங்களால் நசுக்கப்பட்டு ஒரு வித துர்நாற்றத்தை பரப்புகிறது. மாநகராட்சி நிர்வாகம் கேட்டகவே வேண்டாம்.


KRISHNAN R
நவ 04, 2024 08:04

உண்மை...


புதிய வீடியோ